கோவை மாநகராட்சியின் 84-வது வார்டில், கரும்புகடை பாத்திமா நகர் பகுதியில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தார் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து, மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் SDPI கட்சியின் மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேனுக்கு விருந்து வைத்து கவுரவித்தனர்.
தமிழகத்தில் 2022 நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு, மாநகர மாமன்ற உறுப்பினர்கள் பல்வேறு அடிப்படை வசதிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், 84-வது வார்டின் பாத்திமா நகர் பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் நிலையில், நோய்த்தொற்று பரவும் அபாயம் இருந்தது.
இதை கருத்தில் கொண்டு, மாமன்ற உறுப்பினர் அலீமா ராஜாஉசேன் தொடர்ந்து முயற்சி செய்ததன் விளைவாக, இப்பகுதியில் தார் சாலையும், திறந்த வடிகாலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள், அவருக்கு விருந்து வைத்து பாராட்டு விழா நடத்தினர்.
இந்த சம்பவம், இன்றும் பல இடங்களில் அடிப்படை வசதிகள் போதாமையால் மக்கள் எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்பதற்கான எடுத்துக்காட்டு என கருதப்படுகிறது.
மு.சேக்முகைதீன்