உசிலம்பட்டி
21.02.2025
உசிலம்பட்டியில் ரூ 27 லட்சம் மதிப்பீட்டு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ பி.அய்யப்பன்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் ஆர். சி.சிறுமலர் பள்ளியில் தேனி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஒ.பி. ரவீந்திரநாத் பரிந்துரையில் ரூ27லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.,
இதில் கட்சி நிர்வாகிகள்,பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் பல கலந்து கொண்டனர்.,
மேலும் உசிலம்பட்டி எம்எல்ஏ வுக்கு பள்ளி மாணவிகள் நன்றியை தெரிவித்தனர்.
வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.