திருப்பூரில் மதுக்கூடங்களை அடைத்து உரிமையாளர்கள் தொடர் போராட்டம் என அறிவிப்பு
திருப்பூரில் பகுதிகளில் பெங்களூர் மற்றும் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் புழக்கம் இவற்றை கண்டித்து, டாஸ்மாக் மதுக் கூடங்களை அடைத்து அவற்றின் உரிமையாளர்கள் தொடர் போராட்டம் நடத்த போவதாக தெரிய வருகிறது.
திருப்பூர் மாநகர, பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளர்கள் மீது அவப்பெயரை உண்டாக்கும் சில சமூக விரோதிகள் போலியான மது பாட்டில்களை மறைமுகமாக கள்ளச் சந்தையில் வாங்கி வந்து விற்று வருகின்றனர் இவர்கள் மீது வழக்குப் நடவடிக்கை எடுக்க கூறி டாஸ்மாக் மதுக்கூட உரிமையாளர்கல் சார்பில், போராட்டம் நடைபெற்றும் என்று அறிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து டாஸ்மார்க் பார்உரிமையாளர்கல் கூறியது:
திருப்பூரில் தனி நபர்
கள் சிலர் கள்ளச் சந்தையில் மதுவை கூடுதல் விலைக்கு வாங்கி விற்கின்றனர். இதனால் மாநகரப் பகுதிகளில் அரசு மதுக் கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் நடத்திவரும் எங்களால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறையிடம் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்காமல், மதுக்கூட உரிமையாளர்கள்,மிதும் தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிகின்றனர். இதுதொடர்பாக டாஸ்மாக் மேலாளரிடம் ஏற்கெனவே பலமுறை வாய்மொழியாகவும் மற்றும் மனு அளித்துள்ளோம். எனவே, எங்கள் மீது வழக்குப் பதிவதை கைவிடவேண்டும் மற்றும் மதுக்கூடங்களை அரசிடம் ஒப்படைக்கவுள்ளோம் என்றனர் பார் உரிமையாளர்கள் கூறுகின்றனர்
திருப்பூர் மாநகரப் பகுதிகளில் 100க்கு மேற்பட்ட மதுக்கூடங்கள் அடைக்க போவதாக தெரியவந்துள்ளது . இதனால் மாநகரப் பகுதியில் மதுப்பிரியர்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் ரோட்டில் உள்ள பகுதிகளில் மது குடிக்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல்
இவற்றை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் பெங்களூரில் இருந்தும் பாண்டிச்சேரியில் இருந்தும் மது பாட்டில்களை வாங்கி வந்து மற்றும் விஷ சாராயம் சரக்குகள் அமோகமாக விற்பனை செய்து வருகிறார்கள் பல இடங்களிலும் முட்டு சந்துகளில் விற்பனை அமோகமாக நடை பெற்றுவருகிறது .விரைந்து மாவட்ட நிர்வாகம் அரசு அதிகாரிகள் மாநகர ஆணையாளர்நடவடிக்கை எடுப்பார்களா என்று டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது
தமிழ்நாடு டுடே