Tue. Jul 22nd, 2025



இஸ்லாமிய படையெடுப்பு வருவதற்கு முன்பே அது பரக்குன்றம்தான். 

அங்கிருக்கும் இஸ்லாமியர்கள் ஒன்றும் நேரடியாக மக்காவில் இருந்து வந்தவர்கள் இல்லை.. 

பரையர், தேவேந்திரர், நாடார், குறவர், கோனார் என்றெல்லாம் இருந்த நம் அண்ணன் தம்பிகள்தான் அவர்கள். 

அவர்களது முன்னோர்கள் இஸ்லாமியராக மாற்றப்படுவதற்கு முன் முருகனை வணங்கியவர்களாகவே இருப்பார்கள்.. அதுதான் எதார்த்தம். 

இன்று அவர்களின் வழிபாடு மாறியிருக்கலாம்.. ஆனால் அவர்கள் தமிழர்கள்தான்.. 

அப்படி இரு தரப்பினரும் உறவுகளாகப் பழகி வந்ததை, இன்று அரசியலுக்காக மடைமாற்றி, களத்தை சங்கிகளுக்கு சாதகமாக்கி விட்டிருக்கிறது திமுக. 

இனிமே இதைக் காட்டி, “பார்த்தீர்களா, பாசிச பாஜக பூந்துரும்!” என்று உருட்டி, வாக்குப் பிச்சை எடுப்பார்கள் திராவிடர்கள்.. 

இரு தரப்பு சகோதரர்களும் இந்த அரசியலுக்குச் சிக்காமல், பரஸ்பரம் இரு தரப்பு வழிபாட்டையும் மதித்து, பேசித் தீர்வுகாணுங்கள்.. 

– Cartoonist Bala 

Dr.M.Shaikh Mohideen TNT.

மக்கள் ஒற்றுமையை காக்க வேண்டியது அரசின் கடமை… இந்த கடமையை திமுக அரசு செய்யவில்லை… பல வருடங்களாக இந்து முஸ்லிம் ஒற்றுமையாக செய்த ஒன்றை, திமுக அரசின் காவல்துறையை வைத்து, முஸ்லிம்கள், அந்த பகுதி இந்துக்களுடன் இணைந்து , தங்கள் வழக்கமான செய்த ஒன்றை காவல் துறையை வைத்து தடுத்து பிரச்சினையை உருவாக்கி விட்டது…. பின்னர் சட்டபடி தீர்வு இருந்தும்,அதை செய்யாமல் ஒதுங்கி விட்டது….! பகுதியில் பல தலைமுறைகளாக வாழும் அனைத்து சமுதாய மக்களும் தங்களது ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்! மற்றும் ஆளும் திமுகவின் செயல் திட்டங்களையும் ஒருங்கே விமர்சனம் செய்து வருகின்றனர் .

By TN NEWS