சீனிவாசன் – திருச்சி
செய்தியாளர்
சென்னையில் 14 வது தேசிய தபால்தலை கண்காட்சி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந் நிகழ்வில் புவிசார் குறியீடு பெற்ற நமது மணப்பாறை முறுக்கிற்கு மேலும்
பெருமை சேர்க்கும் வகையில் மணப்பாறை முறுக்கு படம் பொறித்த புதிய தபால்தலை வெளியிடப்பட்டது.
சென்னை முதன்மை அஞ்சல்துறை தலைவர் அவர்கள் வெளியிட அதனை
மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் சார்பாக எம்.கே.முத்துப்பாண்டி அவர்கள் பெற்று கொண்டார்கள்.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் திரு.சிவக்குமார் மற்றும் அரசு மற்றும் அஞ்சல் துறை செயலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
