Wed. Jul 23rd, 2025

உசிலம்பட்டி 28.01.2025

*உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்திற்கு பணி நிமித்தமாக வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்வதாக குற்றம்சாட்டி – கோட்டாச்சியருக்கு எதிராக வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் – முற்றுகையிட வந்த வழக்கறிஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு*

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நூற்றாண்டு பழமையான கோட்டாச்சியர் அலுவலகம் இயங்கி வருகிறது.,

இந்த அலுவலகத்திற்கு பிறப்பு, இறப்பு சான்றிதழுக்காக வக்காலத்து வழங்க வழக்கறிஞர்கள் அடிக்கடி வருகை தருவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது.,

இந்நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள உசிலம்பட்டி கோட்டாச்சியர் சண்முக வடிவேல், பணி நிமித்தமாக கோட்டாச்சியர் அலுவலகம் வரும் வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்து வருவதாக குற்றம்சாட்டி, உசிலம்பட்டி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

முன்னதாக உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்திலிருந்து உசிலம்பட்டி தேவர் சிலை வரை ஊர்வலமாக சென்று மீண்டும் உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலக வளாகத்திற்குள் முற்றுகையிட வந்த வழக்கறிஞர்கள் சங்கத்தினரை பாதுகாப்பு பணியில் இருந்த உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையிலான போலீசார் வழக்கறிஞர்களை தடுத்து நிறுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,

போலீசாரின் தடுப்புகளையும் மீறி கோட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பின் கண்டன கோசங்களை எழுப்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.,

வழக்கறிஞர்களை அவமதிப்பு செய்த கோட்டாச்சியர் சண்முக வடிவேல் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.,

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS