தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் தாலுகா, வடக்கு பேருந்து நிலையத்திலிருந்து தாலுகா அலுவலகம் வரை இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் வி.கே. புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் உற்சாகமாக பங்கேற்றனர். பேரணியை தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழாவில் வருவாய் வட்டாட்சியர் சுடலைமணி, தேர்தல் துணை வட்டாட்சியர் ஜெகன், மண்டல துணை வட்டாட்சியர் அப்துல் சமத், வருவாய் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கிராம உதவியாளர் ஜேம்ஸ் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வு பேரணி வாக்காளர்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கவும், தேர்தல் அவசியத்தை போதிக்கவும் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் முதன்மை செய்தியாளர் அமல் ராஜ்.


