என்னுடைய கள அரசியல் பயணம் இங்கிருந்துதான் தொடங்குகிறது.
பரந்தூரில் விமான நிலையத்தை அமைத்து, சென்னையை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் திட்டத்தை நான் எதிர்க்கிறேன்.
விமான நிலையம் வரக்கூடாது என நான் சொல்லவில்லை; இந்த இடத்தில் வரக்கூடாது என்றே சொல்கிறேன்; வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல.
சென்னை மழை வெள்ளத்தில் தத்தளிப்பதே, இங்குள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டதால்தான் என சமீபத்திய ஆய்வு சொல்கிறது.
அரிட்டாப்பட்டி விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் வரவேற்கிறேன்.
ஆனால், அதே நிலைப்பாடுதான் பரந்தூர் விவகாரத்திலும் எடுத்திருக்க வேண்டும்- விஜய்.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசைக் கேட்கிறேன்.
விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும்.
வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம்.
நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம், நன்றி வணக்கம்-விஜய்.
TNT SHAIKH MOHIDEEN.
