Wed. Jul 23rd, 2025

உசிலம்பட்டி – தைத்திருநாளில் நாங்கள் சொல்கிறோம், இன்னும் ஓராண்டுக்கு யார் அந்த சார்? யார் அந்த சார்? என்று கேட்டாலும் கண்டுபிடிக்கப் போவதில்லை.யார் அந்த சார்?தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் எழுந்திருக்கிற அந்தக் கேள்விக்கு விடை காணுகிற தகுதியும் திறனும் உள்ள ஒரே தலைவர் எடப்பாடியார்.. ஆட்சிக்கு வந்த

பின்புதான் யார் அந்த சார் என்று கண்டுபிடித்துத் தருவோம் என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை முன்பு அதிமுக நகர் கழகத்தின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக வினர் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை கண்டித்து யார் அந்த சார் ஸ்டிக்கர் என்ற  வாகனங்களில்  ஓட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஏற்படுத்தினர்.,

இதற்கு முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.,

இன்றைக்கு இந்த தைப்பொங்கல் அர்த்தமில்லாத பொங்கலாய் இருக்கிறது. ஆகவே மீண்டும் எடப்பாடியார் தலைமையில் ஆட்சி அமையும் போது தான் பொங்கலும் எல்லா வளங்களும் நலன்களும் தமிழக மக்களுக்கு கிடைக்கும் என்றும் அந்த நல்ல நாளை எதிர் நோக்கி இந்த தை திருநாளில் உங்களை மனதார வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வாழ்த்து சொல்கின்ற நிலைமை எனக்கு இல்லை எனவும் மோசமான நிலைமை எதிர்கொண்டு கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.,

இன்றைக்கு தைப்பொங்கலில் இந்திய திருநாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் 142 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னொரு புறத்தில் ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமாக பாரம்பரியத்தின் பண்பாட்டின் அடையாளமாக இருக்கிற ஜல்லிக்கட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்னொரு புறத்தில் தமிழ் கடவுளாம் ஆறுபடை வீடு கொண்டிருக்கிற முருகக்கடவுள் மலையில் வீட்டில் இருக்கிற பழனியில் குடி கொண்டிருக்கிற இந்த நாட்டை காத்து வருகிற பழனிச்சாமியை பார்ப்பதற்கு கால்நடையாக பாதயாத்திரையாக சென்று கொண்டிருக்கிற பக்தர்களுக்கு புரட்சித்தமிழர் எடப்பாடி யார் வழிகாட்டுதலோடு அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும்,

பாதிக்கப்பட்ட என் குழந்தைக்கு நீதி வேண்டும் என்று நெஞ்சுரத்தோடு தமிழகம் முழுவதும் இன்றைக்கு போராடுகிற ஒரே இயக்கம் அதிமுக என்றும் இந்த மாபெரும் விழிப்புணர்வு பிரச்சார பேரணியை விளக்க கூட்டத்தை இந்த நகர் கழகத்தில் துவக்கி வைத்துள்ளனர்.,

பேரறிஞர் அண்ணா பெயரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் குற்றவாளி எப்படி வளாகத்திற்குள் செல்லலாம் ? இன்றைக்கு குற்றவாளி உள்ளே சென்று படிக்கிற மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் பாதிக்கப்பட்ட மாணவி உடனடியாக புகார் கொடுத்திருக்கிறார்.

இந்த புகாரில் அடையாளத்துடன் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார் மூன்று ஆப்ஷன்களை குற்றவாளி என் மீது திணிக்கிற போது உங்க சாறுடன் இருக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தி வற்புறுத்தி துன்புறுத்தினான் என்று பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்திருக்கிறார்.,

அந்த எஃப் ஐ ஆர்  வெளியில் எப்படி பரவியது என்றும் ஏன் வெளிவந்தது, எப்படி வெளிவந்தது, எதற்காக வெளிவந்தது என்றும் இது போன்று பாதிக்கப்பட்ட மாணவிகள் எப்படி தைரியமாக புகார் கொடுக்க வருவார்கள் என்றும், புகார் வெளிவந்தது டெக்னிக்கல் எரர் சரி நீங்கள் சொல்வதைக் கேட்டு தலை எழுத்து கடந்து போக வேண்டும் என்றும் அவசர அவசரமாக அனுபவம் வாய்ந்த அருண் ஐபிஎஸ் என்கிற போலீஸ் ஆணையர் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன எனவும்,

குற்றவாளியை கைது செய்து விட்டோம் என்று கூறினால் யார் அந்த சார் என்றும் அவருக்காக நியாயப்படுத்தி கட்டாயம் அருண் ஐபிஎஸ் ஏன் வந்தது யார் அந்த சார் தமிழகத்தில் உள்ள அனைவரும் மகளிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று எல்லோரும் உச்சரிக்கின்ற வார்த்தை ஸ்டாலினை பார்த்து திமுக அரசை பார்த்து கேட்கின்ற ஒரே வார்த்தை ஸ்டாலின் அண்ணாச்சி யார் அந்த சார் என்ற கேள்விக்கு விடை கிடைக்கின்ற வரை அதிமுக கிராமம் கிராமமாக பட்டி தொட்டி எங்கும் வீதி தோறும் மாபெரும் மக்கள் இயக்கமாக போராடும் என்றும்,

எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரிந்தால் கொண்டு வந்து விசாரணை குழுவிடம் கொடுங்கள் என்று முதலமைச்சர் கூறினார் என்றும் அதற்கு எதிர் கட்சித் தலைவர் முக ஸ்டாலின் அவர்களே முதலமைச்சர் பதவி உங்களிடம் தான் இருக்கிறது கண்டுபிடிக்கவில்லை என்றால் விலகிச் செல்லுங்கள் நாங்கள் கண்டுபிடித்து குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கிறோம் என்றும் அதுதான் நடக்கப் போகிறது இந்தத் தைத்திருநாளில் நாங்கள் சொல்கிறோம் இன்னும் ஓராண்டுக்கு யார் அந்த சார்? யார் அந்த சார் என்று கேட்டாலும் கண்டுபிடிக்க போவதில்லை யார் அந்த சார் தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் எழுந்திருக்கிற அந்தக் கேள்விக்கு விடை காணுகிற தகுதியும் திறனும் உள்ள ஒரே தலைவர் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்த பின்பு தான் யார் அந்த சார் என்று கண்டுபிடித்து தருவோம் எனவும்.,

ஆகவே இன்றைக்கு இந்த அரசு மீது, முதலமைச்சர் மீது, இந்த மக்கள், தோழர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், மாணவர்கள் அத்தனை பேரும் நம்பிக்கை இழந்து விட்டார்கள் ஆகவே இந்த தமிழ்நாட்டை மீட்டெடுக்கின்ற நம்முடைய ஒரே தலைவர் எடப்பாடியார் தலைமையில் ஆட்சியை அமைப்போம் என சூளுரை ஏற்று நன்றிகூறி வணங்கி  அனைவருக்கும் தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார்.

வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.

By TN NEWS