கடந்த 25/11/2024 ஆம் தேதி நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டிய சொத்து சம்பந்தமான பிரச்சனையில் 65 வயது நிரம்பிய மூதாட்டி என்றும் பாராமல் ஏன் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய என்னை தாக்கி, வழக்கறிஞர் தொழிலை இழிவுபடுத்தும் விதமாக,
காவல் நிலையத்திற்கு வரும் வழக்கறிஞர்கள் எல்லாம் லாய்க்கு இல்லாத வக்கீல்கள் என்று தகாத வார்த்தைகளை பேசி , கொலைவெறியோடு மிரட்டல் விடுத்த மறைமலைநகர் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உரிய காவல் நிலையத்திலும் ,காவல் துறை உயர் அதிகாரிகளிடத்திலும் நான் புகார் கொடுத்தும் ,
செங்கல்பட்டு மாவட்ட வழக்கறிஞர்கள் மறைமலைநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது உரிய நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் என்று தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்தும், கண்டன பேரணியையும் நடத்தினார்கள்.
ஆனால் காவல்துறையை கண்டித்து கண்டனம் தீர்மானம் போட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டிய நமது வழக்கறிஞர் சங்க தலைவர் , ஒரு கோரிக்கை மனுவை கூட சங்கத்தின் சார்பில் கொடுக்க மறுத்தும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த மறுத்துவிட்டார்.
அதை செய்யாமல் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு மட்டும் செய்துவிட்டு அதோடு விட்டுவிட்டார்கள்.
எனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து, எனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் வழக்கறிஞர் சமூகத்தை கேவலப்படுத்திய மறைமலைநகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தொடர்ந்து போராடி வருகிறேன்.
ஆனால் சில வழக்கறிஞர்கள் நான் பணம் பெற்றுக் கொண்டு அமைதியாகிவிட்டதாக வதந்திகளை பரப்பி என்னுடைய தொடர் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறார்கள்.
ஒன்றை மட்டும் நான் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.தொடர் நடவடிக்கையாக முதலில் உதவி ஆணையர் அவர்களையும், அடுத்ததாக துணை ஆணையர் அவர்களையும், அதற்கடுத்ததாக தாம்பரம் காவல்துறை ஆணையர் அவர்களையும் , சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதன் விளைவாக இரண்டு கட்டமாக விசாரணை முடிவடைந்த நிலையிலும், காவல்துறை வேண்டுமென்றே கிருஷ்ணகுமார் மீதான நடவடிக்கையை தாமதப்படுத்துவதை அறிந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டி 09.01.2025 இன்று தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனரை சந்தித்து மனு கொடுத்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.
தமிழக டிஜிபி அவர்கள் தாம்பரம் காவல் ஆணையர் அவர்களிடம் அறிக்கை வரப்பெற்று இரண்டு வாரத்திற்குள்ளாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருக்கிறார் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். காவல்துறையின் அநீதிக்கு எதிரான என்னுடைய நியாயமான இந்த சட்டப் போராட்டத்திற்கு மூத்த மற்றும் இளம் வழக்கறிஞர்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
M.ஜெகதீசன்.
CBA – வழக்கறிஞர்
செங்கல்பட்டு.




மு.சேக் முகைதீன்