உசிலம்பட்டி 10.01.2025
*உசிலம்பட்டியில் அரிமா சங்கம் மற்றும் காவல்துறை, மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.,*
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர அரிமா சங்கம் மற்றும் போக்குவரத்து காவல்துறை, உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து போதை பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.,
இந்த பேரணியை உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி கொடி அசைத்து துவக்கி வைத்த நிலையில் கவணம்பட்டி ரோடு, பேரையூர் ரோடு, தேனி ரோடு, தேவர் சிலை வழியாக என நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.,
போதை பொருளை ஒழிக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறு சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.,
வீர சேகர் – மதுரை மாவட்டம் செய்தியாளர்.
