சிதம்பரம், மே 30:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஐந்து முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு இன்று சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமீம் அன்சாரி அவர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த மனுவை சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து வழங்கியதுடன், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நிர்வாக மற்றும் நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் விளக்கமளித்தனர். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருடன் விரைவில் ஆலோசனை நடத்துவதாக உறுதியளித்தார். மேலும், அரசு பிரதிநிதிகள், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் கோரிக்கையாளர்கள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனால் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். விரைவில் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
செய்தியாளர்: சிவக்குமார்
இடம்: சிதம்பரம்.