Sat. May 30th, 2026

உண்மை என்ன?

“அழகான சாவிக்கொத்துகளில் (Key Chain) Tracking Chip வைத்து மக்களை வீட்டுவரை பின்தொடர்கிறார்கள்” என்ற எச்சரிக்கை செய்தி 2008 முதல் உலகின் பல நாடுகளில் சுற்றி வரும் பழைய வதந்தி.

அதே செய்தி பல நேரங்களில் மும்பை விமான நிலையம், போலீஸ் துறை, வெவ்வேறு நாடுகளின் விமான நிலையங்கள் போன்ற பெயர்களில் மாற்றி மாற்றி பரப்பப்பட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் இப்படிப்பட்ட எச்சரிக்கையை வெளியிடவில்லை என்று Fact-Check அறிக்கைகள் கூறுகின்றன.

பதிவில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு விவரங்களும் அதிகாரப்பூர்வ தகவல்களுடன் பொருந்தவில்லை என்று சரிபார்க்கப்பட்டுள்ளது.

படத்தில் உள்ள Key Chain பற்றி…?

படத்தில் காணப்படும் Tom & Jerry சாவிக்கொத்துகள் சாதாரணமாக சந்தையில் மற்றும் ஆன்லைனில் விற்கப்படும் அலங்கார Key Chains போன்றவை. ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து அதில் Tracking Chip இருக்கிறது என்று கூற முடியாது.

தொழில்நுட்ப ரீதியாக;

Bluetooth Tracker போன்ற சாதனங்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் அவை:

தனியாக நீண்ட தூரத்தில் ஒருவரை ரகசியமாக தொடர்ந்து கண்காணிப்பதற்கு பொருத்தமானவை அல்ல.

செயல்பட மொபைல் App மற்றும் Bluetooth இணைப்பு தேவைப்படும்.

“இலவச Key Chain கொடுத்து வீட்டை கண்டுபிடிக்கிறார்கள்” என்ற கூற்றுக்கு எந்த ஆதாரமும் இல்லை.

தீர்ப்பு:

Fact Check Result: FALSE / HOAX:

“விமான நிலைய அவசர எச்சரிக்கை” என்ற பெயரில் பரவும் இந்த செய்தி பழைய வதந்தி. இதை அதிகாரப்பூர்வ விமான நிலைய அறிவிப்பாக கருத வேண்டாம். ஆதாரமின்றி சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்.

தமிழ்நாடு டுடே செய்திகள் குழுமம் மீடியா Fact Check தலைப்பு:

**“Tracking Chip பொருத்திய Key Chain விற்பனை: விமான நிலைய எச்சரிக்கை என பரவும் செய்தி பொய் – Fact Check”**

ஷேக் முகைதீன் – இணை ஆசிரியர்.

By TN NEWS