Thu. May 28th, 2026

திண்டுக்கல், மே 27, 2026

திண்டுக்கல் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ விவரம்:

திண்டுக்கல் அருகே உள்ள மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி, சோலையாராஜா காலனியைச் சேர்ந்தவர்கள் குமரேசன் (47) மற்றும் கார்த்திகேயன் (44). இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக குடும்பப் பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த முன்விரோதம் காரணமாக, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்த மோதலில் குமரேசன் பலத்த காயமடைந்தார்.

நடவடிக்கை:

காயமடைந்த குமரேசன் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த தடிக்கொம்பு காவல்துறையினர், உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் முடிவில், கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர்.

செய்தியாளர்: சந்திரமோகன், திண்டுக்கல் மாவட்டம்.

By TN NEWS