கன்னியாகுமரி, மே 19: தமிழ்நாடு அரசு மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம், பேருந்து பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் தங்கள் பணி நேரத்தின் போது கைப்பேசியைப் பயன்படுத்துவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுநர்கள் தங்கள் சட்டையின் மேல் பையில்கூட கைப்பேசியை வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டும் போது கைப்பேசியைப் பயன்படுத்துவதால் ஓட்டுநரின் கவனம் சிதறி, விபத்துகள் நிகழும் அபாயம் இருப்பதாகப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் ஓட்டுநர்களுக்குக் கடுமையான துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முன்னாள் முதல்வரின் நல்லெண்ணத்தைத் தொடரும் புதிய அரசு.
இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் முதன்முதலில் கொண்டு வரப்பட்டு, அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போதைய புதிய அரசு, முந்தைய ஆட்சியின் நல்ல திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி, மக்களின் நலனில் அக்கறை காட்டும் நல்ல செயலைச் செய்துள்ளது. இதற்குப் பாராட்டுக்கள்.
தமிழ்நாடு டுடே, கன்னியாகுமரி மாவட்டச் செய்தியாளர்: ஷாலு V. J.