Sun. May 10th, 2026

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்காத தமிழக பொறுப்பு ஆளுநரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். பொருளாளர் இலியாஸ் பாஷா, துணைத் தலைவர் விஜயேந்திரன், பொதுச்செயலாளர் சரவணன், யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

குடியாத்தம் கிழக்கு நகர காங்கிரஸ் தலைவர் லாலாஜாபதி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் கிருபானந்தம், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் கிருஷ்ணவேணி, மாவட்ட துணைத்தலைவர் சேகரன், குடியாத்தம் தெற்கு வட்டாரத் தலைவர் ஜோதி கணேசன், மாவட்ட பொதுச்செயலாளர் பாரத் நவீன்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு எம்.கே. யுவராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கோமதி குமரேசன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இறுதியாக குடியாத்தம் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வீராங்கன் நன்றி கூறினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS