ஸ்ரீ ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள ஸ்ரீ ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா பக்தி பூர்வமாக நடைபெற்றது.
மாலை 6 மணியளவில் ஸ்ரீ பகமாலினி நித்யா தேவி பூஜை சிறப்பாக நடத்தப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு விழா குழுவினர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இரவு 8.30 மணிக்கு சித்ரா பௌர்ணமி நிலாவை முன்னிட்டு சுமார் 1000 பேருக்கு நிலா விருந்து வழங்கப்பட்டது.
இந்த விழாவை சிறப்பாக நடத்துவதில் ஆரிய வைசிய சமூகத்தினரும், வாசவி கிளப் மற்றும் வனிதா கிளப் உறுப்பினர்களும் முக்கிய பங்கு வகித்தனர். காலை முதல் இரவு வரை நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளிலும் தன்னார்வத்துடன் பங்களித்த அனைவருக்கும் விழா குழுவினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர் கே. கோல்டு ரவி, எஸ்.எல்.வி சந்தோஷ் நகை அடகு கடை கே. ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.