Sun. Apr 19th, 2026

திண்டுக்கல், ஏப்ரல் 18:
திண்டுக்கல் மாவட்டம் பகுதியில் உள்ள அம்பாத்துரை காவல் நிலையம்யில், காவல்துறையினரின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சி, காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஹெட்கான்ஸ்டபிள் “நேவிஸ் அருளானந்து மேரி” அவர்களின் பிறந்த நாள் (18.04.2026) முன்னிட்டு சக ஊழியர்கள் இணைந்து கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தனர்.

விழாவில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணவேணி, சுப்புராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிமுருகன், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர். காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியான சூழலை உருவாக்கினர்.

இந்நிகழ்வு, காவல்துறையில் பணிபுரியும் ஊழியர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் சிறப்பான தருணமாக அமைந்தது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்

By TN NEWS