Mon. Apr 13th, 2026

விழுப்புரம், ஏப்ரல் 13:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக போட்டியிடும் செஞ்சி மஸ்தான், தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மூன்றாவது முறையாக தேர்தலில் களம் இறங்கியுள்ள அவர், செஞ்சி கிழக்கு ஒன்றியம் நரசிங்கராயன் பேட்டை ஊராட்சிக்குட்பட்ட அங்கராயநல்லூர், பூமியான் கொட்டை, ஆதிதிராவிடர் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர், ஜே.ஜே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளர்களை நேரில் சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

இந்த பிரச்சார நிகழ்வு, ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

பிரச்சாரத்தின் போது பேசிய செஞ்சி மஸ்தான், மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசின் பல்வேறு நலத்திட்டங்களை எடுத்துக்கூறினார்.
மகளிர் விடியல் பயணம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம், புதுமைப் பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன என அவர் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளையும் அவர் விளக்கினார்.

காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்

மகளிர் உரிமைத்தொகை ₹2000 ஆக உயர்வு

மாணவர்களுக்கு மாதாந்திர உதவி

விவசாயிகளுக்கு நெல் மற்றும் கரும்புக்கு உயர்ந்த கொள்முதல் விலை

இந்த திட்டங்கள் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட வேண்டுமெனில், மீண்டும் திமுக ஆட்சி அமைவது அவசியம் எனவும், அதற்காக உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் வாக்காளர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான பல்வேறு கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தகவல்:
கே. மாரி
விழுப்புரம் மாவட்ட ஒளிப்பதிவாளர்

By TN NEWS