Mon. Apr 13th, 2026

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறைந்த சம்பளம் மற்றும் கடுமையான வேலைநிலைகள் குறித்து வேதனை வெளியிட்டுள்ளனர்.

M.Phil, B.Ed போன்ற உயர்கல்வி தகுதிகளுடன் பல ஆண்டுகள் படித்து வந்த ஆசிரியர்கள் மாதம் ரூ.8,000 முதல் ரூ.12,000 வரையிலான குறைந்த சம்பளத்திலேயே பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

காலை 8:30 மணி முதல் மாலை 6 மணி வரை நீண்ட நேரப் பணியுடன், பல பாடவேளைகளை கற்பிக்க வேண்டிய கட்டாயம், மேலும் வீட்டிற்கு பிறகும் பாடப்பிரதி திருத்தும் வேலை ஆகியவை சேர்ந்து அதிக உழைப்பை ஏற்படுத்துகின்றன என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

சில தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களின் அசல் சான்றிதழ்கள் வைத்துக் கொண்டு, வேலை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அரசு தலையிட்டு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும், “சம வேலைக்கு சம ஊதியம்” நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📍 குடியாத்தம்.

👉 17 வருடம் படித்த ஆசிரியர் — சம்பளம் ₹8,000!
👉 ஒரு நாளைக்கு ₹300 கூட கிடைக்காத நிலை!
👉 காலை 8:30 முதல் மாலை 6 வரை வேலை + வீட்டில் கூட வேலை!

இது கல்வியா? இல்லை… நவீன அடிமைத்தனமா?

💢 “டீச்சர்”ன்னு வெளியே மரியாதை
💢 வீட்டுக்குள் கடன், வாடகை, பசி

👉 கார்ப்பரேட் பள்ளிகள் கல்வியை “சரக்கு” ஆக்கி
👉 ஆசிரியர்களை “மெஷின்” மாதிரி சுரண்டுற நிலை!

⚠️ சான்றிதழ் பறிமுதல் செய்து
“பணயக்கைதி” மாதிரி நடத்துறது — சட்டவிரோதமல்லவா?

🚨 கேள்விகள்:

சம வேலைக்கு சம ஊதியம் எங்கே?

குறைந்தபட்ச ஊதியம் கூட ஏன் கிடைக்கவில்லை?

அறிவை கற்பிக்கும் ஆசிரியரின் வாழ்வு இப்படி இருக்க வேண்டுமா?

📢 ஆசிரியர்களின் கோரிக்கை:

✔️ குறைந்தபட்சம் ₹25,000 சம்பளம் சட்டமாக்க வேண்டும்
✔️ விதிமீறும் பள்ளிகளின் உரிமம் ரத்து செய்ய வேண்டும்
✔️ “சம வேலைக்கு சம ஊதியம்” கட்டாயம்
✔️ கண்காணிப்பு வாரியம் அமைக்க வேண்டும்

“ஒரு தேசத்தின் எதிர்காலத்தை உருவாக்குபவர்கள்… இன்று உயிர் பிழைக்க போராடுகிறார்கள்!”

✍️ செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS