Thu. Apr 9th, 2026

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் நித்தியசுகுமார், வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறவுள்ள தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு அவர் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.

இந்த பிரச்சாரத்தில், வேட்பாளர் நித்தியசுகுமாரை தொடர்ந்து கட்சி தொண்டர்களும் இணைந்து வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களிடையே தங்களது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் திட்டங்களை எடுத்துரைத்து, ஆதரவை திரட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் வெங்கடேஷ் ஷா

By TN NEWS