Thu. Apr 9th, 2026

திண்டுக்கல் மாவட்டம் பழனி அக்கரைப்பட்டி அருகே சட்டவிரோதமாக சாராயம் தயாரித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அப்பகுதியில் சாராய ஊரல் அமைத்து மது தயாரிப்பு நடைபெற்று வந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய காளியப்பன் மற்றும் முருகேசன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சோதனையின் போது அங்கு இருந்த சுமார் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் விதிமுறைகளின்படி அழிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ராமர்

By TN NEWS