Thu. Apr 9th, 2026

திண்டுக்கல் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படை சோதனை அலுவலர் மருதமுத்து தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அலெக்சாண்டர் மற்றும் போலீசார் செட்டி நாயக்கன்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான பாட்டில்களை பறக்கும் படையினர் கண்டறிந்தனர்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய நபர் பறக்கும் படையினரை கண்டு தப்பி ஓடியதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அங்கு இருந்த 69 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை தாசில்தார் பிரேம்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

செய்தியாளர்

இராமர்

திண்டுக்கல் மாவட்டம்

By TN NEWS