Wed. Apr 8th, 2026

பாப்பிரெட்டிப்பட்டி, ஏப். 6:

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், தர்மபுரி மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான முனைவர் பெ. பழனியப்பன், M.Sc., Ph.D., அவர்கள் இன்று (06.04.2026) தொகுதிக்குட்பட்ட அ. பள்ளிப்பட்டி மற்றும் நாகலூர் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தின் போது, நாகலூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில், அப்பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது குழந்தையுடன் வந்து வேட்பாளரை சந்தித்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று, குழந்தைக்கு “கனிமொழி” என அன்புடன் பெயர் சூட்டி, குழந்தையையும் அதன் பெற்றோர்களையும் வாழ்த்தினார்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மண்டல செய்தியாளர்
ராஜீவ்காந்தி

By TN NEWS