Mon. Apr 6th, 2026

ஏப்ரல் 5

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள பூசாரி வலசை பகுதியில் பரிதாபகரமான விபத்து ஒன்று நடைபெற்றுள்ளது.

அப்பகுதியில் மாணிக்கம் (த/பெ ரங்க கவுண்டர்) என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தரை கிணற்றில், ஆந்திர மாநிலம் யாதமரி பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (20) என்பவர் குளிக்கச் சென்றுள்ளார். இவர் அங்கு பனங்காய் வெட்டி சாப்பிட வந்திருந்ததாக கூறப்படுகிறது.

குளிக்கும் போது தவறி கிணற்றில் விழுந்து, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இளைஞரின் உடலை மீட்டனர். பின்னர் உடல் கூராய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பரதராமி காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் வழக்குப் பதிவு செய்து, மேலான விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்


By TN NEWS