Sun. Apr 5th, 2026

திண்டுக்கல், ஏப்ரல் 4

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, திமுக சார்பில் Kanimozhi Karunanidhi அவர்கள் பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

திண்டுக்கல் தொகுதி திமுக வேட்பாளர் I. P. Senthil Kumar அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், திமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் திண்டுக்கல் நகருக்கு கொண்டு வரப்படும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமளித்தார்.

இந்நிலையில், பிரச்சார கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர் இடத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு ஒரு குறுகிய நேர குழப்ப நிலையும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக, திமுக அறிவித்த திட்டங்கள் பொதுமக்களுக்கு திருப்தியளிக்காததாலா அல்லது வேட்பாளர் மீதான உள்ளூர் அதிருப்தியா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.

✍️ செய்தியாளர்:
சித்திர பிரகாஷ்
திண்டுக்கல்


By TN NEWS