கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சியின் தலைவர் திரு. தமிமுன் அன்சாரி அவர்கள் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு சிதம்பரம் நகர கழகத்தில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தை தி.மு.கழகத்தின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், தமிழக வேளாண்துறை அமைச்சருமான M. R. K. Panneerselvam தொடங்கி வைத்து உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி. கதிரவன், விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) சிதம்பரம் தொகுதி செயலாளர் வ.க. செல்லப்பன், மாவட்டச் செயலாளர் பால அறவாழி, தெய்வீக பக்தர் பேரவை தலைவர் ஜெமினி எம்.என். ராதா, காங்கிரஸ் தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி. சித்தார்த்தன், நகரத் தலைவர் தில்லை மக்கீன் உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தலைவர்கள்,
“நாம் தேர்தல் போர்க்களத்தில் நிற்கிறோம். இலக்கை எட்டும் வரை, வெற்றி பெறும் வரை ஓய்வும் இல்லை, உறக்கமும் இல்லை என்ற உறுதியுடன் செயல்பட வேண்டும். கழக ஆட்சியை மீண்டும் அமைத்து, நமது வேட்பாளர் தமிமுன் அன்சாரி அவர்களை வெற்றி பெறச் செய்வோம்,” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
சிவக்குமார், சிதம்பரம் செய்தியாளர்