Fri. Mar 27th, 2026

குடியாத்தம் நகரக் கழக செயலாளர் ஒருமனதாக தேர்வு. 

வேலூர் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் குடியாத்தம் நகரக் கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 26) மாலை 4.00 மணி அளவில் குடியாத்தம் நடுப்பேட்டை காந்தி ரோடு பகுதியில் உள்ள தனியார் கட்டிடத்தில் நடைபெற்றது. 

குடியாத்தம் நகரக் கழகச் செயலாளராக திரு K.N. சம்பத்குமார் அவர்களை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்க நகரக் கழக நிர்வாகிகள் அனைவரும் முன்மொழிந்து ஒப்புதல் தெரிவித்தனர். இதன் மூலம் நகரக் கழகத்தின் ஒழுங்குமுறை, அமைப்பு வலுப்படுத்தல், மக்கள் தொடர்பு பணிகள் தீவிரப்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. 

இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் Mk. பூபாலன், பேரணாம்பட்டு நகரக் கழக செயலாளர் சுரேஷ், குடியாத்தம் நகரக் கழக பொருளாளர் நவ்ஷாத், நகர இணைச் செயலாளர் கார்த்திகேயன், நகர துணைச் செயலாளர் பிச்சுமணி, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஹேமந்த் ஷர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர். 

அதேபோல், வார்டு கழகச் செயலாளர்கள் ஜெயபிரகாஷ், ராஜேஷ், தீனதயாளன், காதர், தனஜெயன், ஜெகதீசன், ஆனந்த், கோடீஸ்வரன், ஜீவா, தினேஷ்குமார், திரு பஞ்சாட்சரம் மற்றும் பலர் உட்பட கழகத்தின் நகர, வார்டு நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டு புதிய நகரக் கழகச் செயலாளருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கத் தயார் என தெரிவித்தனர். 

கூட்டத்தினை முடித்து வைத்த பிறகு, வரவிருக்கும் தேர்தல் சூழ்நிலை, மக்கள் தொடர்பு முகாம்கள், வீடு தேடி சென்று வாக்காளர் தகவல் சேகரிப்பு, இளைஞர் மற்றும் பெண்கள் அணியின் விரிவாக்கம் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன. 

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

By TN NEWS