Fri. Mar 27th, 2026

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே முசுவநூத்து பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.58,000 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மாரிமுத்து தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆரோக்கியஅமுதா, காவலர் சையதுஅன்வர் உள்ளிட்டோர் அடங்கிய தேர்தல் பறக்கும் படையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் ரூ.58,000 பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த அதிகாரிகள், நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

இந்த நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமர்

திண்டுக்கல் மாவட்டம்

By TN NEWS