குடியாத்தம், மார்ச் 25:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேல் செட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த சுரேந்தர் (தந்தை: செந்தில்குமார் – மறைந்தவர்), பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார். இவர் நண்பர்களுடன் BN Palayam கிராம சர்வே எண் 212-இல் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஏரியில் சேற்றில் சிக்கியதால் சுரேந்தர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அங்கு இருந்தவர்கள் அவரது உடலை மீட்டு, குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் கிராமிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தியாளர்:
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா