Wed. Mar 25th, 2026

திண்டுக்கல், மார்ச் 25:
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சாலையில் அச்சுதாபள்ளி அருகே, தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.84,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மணிகண்டன் தலைமையிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது, திண்டுக்கல் R.M. காலனியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி பணத்தை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சுல்தான் சிக்கந்தர் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அந்த பணம் அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ராமர்

By TN NEWS