திருச்சி, மார்ச் 25:
திருச்சி விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நத்தமாடிப்பட்டி மற்றும் கீழக்குறிச்சி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், திருச்சி நீதிமன்றம் அருகிலுள்ள தமிழ்நாடு அரசு நீர்வள ஆதாரத்துறையின் ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விமான நிலைய விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் பெரும்பாலும் விவசாய நிலங்களாக இருப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும், நத்தமாடிப்பட்டி–பொன்மலை இணைப்பு சாலை மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், அது மாநகருக்கான முக்கிய சாலையாக இருப்பதால் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகும் என அஞ்சப்படுகிறது.
பல ஆண்டுகளாக வசித்து வரும் தங்களுக்கு உரிய இழப்பீடு அல்லது மாற்று இடம் வழங்காமல் நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
தற்போது சுமார் 12.5 ஏக்கர் முதல் 30 ஏக்கர் வரையிலான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக நீர்நிலைகள் மற்றும் சில தனியார் நிலங்களை எடுக்கும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்ட தலைமை நிருபர் ஆர். மணி