செஞ்சி, மார்ச் 22:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மேல்கலவாய் அடுத்த காரியமங்கலம் கூட்டுச்சாலையில் இயங்கி வரும் டேனி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 6ஆம் ஆண்டு பள்ளி ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு டேனி கல்விக் குழும தலைவர் ஜாஸ்பர் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் ஸ்டெல்லா பாக்கியவதி முன்னிலை வகித்தார். கல்வியாளர் முனைவர் சக்திவேல் நோக்கவுரை வழங்கினார். பள்ளி முதல்வர் மகாலட்சுமி ஆண்டறிக்கையை வாசித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் பச்சையப்பாஸ் ஆண்கள் கல்லூரி பொருளியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் நந்தகோபால் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் விழுப்புரம் மாவட்ட செயலாளர் ஆசிரியர் சு. இளங்கோவன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் எட்டாம் வகுப்பு மாணவர் குமரனுக்கு “உதவும் உள்ளம்” விருதும், நான்காம் வகுப்பு மாணவர் தரணிக்கு “சிறுசேமி சிகரம்” விருதும் வழங்கப்பட்டது. மேலும், 100% வருகைப் பதிவுக்காக ஆறாம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ மற்றும் முதல் வகுப்பு மாணவர் லக்ஷன் ஆகியோர் பாராட்டப்பட்டனர்.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சிறந்த ஆய்வுகளை வழங்கிய முதல் மூன்று மாணவர்களுக்கும், அபாகஸ் தேர்வில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கும் கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளில் மாணவர்கள் நாடகம், நடனம், பேச்சுப்போட்டி, சிலம்பம் மற்றும் வீரச் சாகசங்கள் மூலம் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சியை பேராசிரியர் பரிதி ஓவியா மற்றும் டேனி கல்வியியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி கீதாஞ்சலி தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரி, பேராசிரியர்கள் தபித்தா விண்ணரசி, சரவணன், மரியசெல்வம், ஆசிரியர்கள் கனிமொழி, மகாலட்சுமி, சூரியபிரகாஷ், சீனிவாசன், ஆனந்த், விண்ணரசி, அருள்மொழி, அஸ்வினி, சாமுண்டீஸ்வரி, கலைச்செல்வி, வெண்ணிலா, ஜலகண்டேஷ்வரி உள்ளிட்டோர், மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக ஆசிரியர் கயல்விழி நன்றியுரை வழங்கினார்.
ஒளிப்பதிவு: கே. மாரி, விழுப்புரம் மாவட்டம்