பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் வரவேற்பு – குலதெய்வ வழிபாடு.
குடியாத்தம், மார்ச் 21:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த, தேமுதிக கட்சியின் பொருளாளரும், புதியதாக ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள எல்.கே. சுதீஷ், தனது சொந்த ஊருக்கு முதல் முறையாக வருகை தந்தார்.
அவரை வரவேற்க கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, மேளதாளங்களுடன் உற்சாகமாக வரவேற்றனர். மேலும், மாலை அணிவித்து அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், தனது சொந்த ஊரில் உள்ள குலதெய்வ கோவிலில் சுதீஷ் வழிபாடு நடத்தினார். அதன்பின், உள்ளூர் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் இணைந்து, அவர் எம்.பி.யாக தேர்வு பெற்றதைக் கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மகிழ்ச்சி பகிர்ந்தனர்.
இதற்கிடையில், அவர் வந்த வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் வழக்கமான சோதனைக்குட்படுத்தினர்.
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.கே. சுதீஷ் கூறியதாவது:
“ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, முதன்முறையாக என் குலதெய்வத்தை வணங்க வந்துள்ளேன்.
இது என் சொந்த ஊர் என்பதால், நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவும் வந்துள்ளேன்.
திமுக கூட்டணியில் எங்களுக்கு எத்தனை தொகுதிகள், எந்த தொகுதிகள் என்பதனை அவர்கள் பின்னர் அறிவிப்பார்கள்.
தொகுதி அறிவித்த பிறகு, மீண்டும் வந்து குலதெய்வத்தை வழிபட்டு பிரச்சாரத்தை தொடங்குவேன்.”
ஆம்பூர் தொகுதி தொடர்பான கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:
“நான் படித்தது ஆம்பூரில்தான். எனக்கு அங்கு பல இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.
தேர்தல் நேரம் என்பதால், நான் ரமலான் தொழுகையில் கலந்து கொண்டது பேசுபொருளாகியுள்ளது.
ஆம்பூரில் பிரேமலதா போட்டியிடுவது குறித்து முடிவு எங்களிடம் இல்லை; அது திமுகவின் முடிவு.”
மேலும் அவர் கூறியதாவது:
“2006-ல் குடியாத்தத்தில் போட்டியிட்டபோது 30 ஆயிரம் வாக்குகள் பெற்றேன்.
ரசிகர் மன்றமாக இருந்தபோது அதுவே சாதனை.
கட்சியாக மாறிய பிறகு கள்ளக்குறிச்சியில் அதிக வாக்குகள் பெற்றாலும் வெற்றி பெற முடியவில்லை.
நடிகர்கள் கட்சி தொடங்கிய பிறகு வெற்றி பெறுவது கடினம் தான்.”
இறுதியாக,
“எம்.பி. ஆன பிறகு, என் மண்ணில் என் சாமியை வணங்குவது மிகுந்த ஆனந்தமாக உள்ளது. ராமதாஸ்–சசிகலா கூட்டணிக்கு வாழ்த்துகள்,” என அவர் தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்