கோவை, மார்ச் 14
வணிக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தட்டுப்பாடு மற்றும் வீட்டு எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து எதிர்ப்பு.
ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான போர் சூழ்நிலை காரணமாக நாடு முழுவதும் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனுடன் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்ததால் பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்த சூழ்நிலையில், வணிக கேஸ் சிலிண்டர்களின் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
“மோடி ஜி… எல்பிஜி எங்க ஜி?” – கோஷங்கள்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், மத்திய அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
“மோடி ஜி… மோடி ஜி… எல்பிஜி எங்க ஜி?” என்ற கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
நமது சிறப்பு நிருபர்
கோவை மாவட்டம்
