சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தல்.
திண்டுக்கல், மார்ச் 12
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கில் திண்டுக்கல் நகரின் முக்கிய பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து ரூட் மார்ச் நடத்தினர்.
பொதுமக்களுக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும், தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பேணவும் இந்த ரூட் மார்ச் மேற்கொள்ளப்பட்டது.
முக்கிய சாலைகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய பகுதிகள் வழியாக மத்திய பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் அணிவகுத்து சென்றனர்.
இந்த ரூட் மார்ச்சில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஏ. பிரதீப், இ.கா.ப., மற்றும் திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தேர்தல் அமைதியாகவும் சீராகவும் நடைபெற இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திண்டுக்கல்லில் காவல்துறை – மத்திய பாதுகாப்புப் படையினர் கொடி அணி வகுப்பு.
வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிக்க வேண்டும் என்பதையும், ஜனநாயக கடமையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் திண்டுக்கல்லில் காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படையினர் இணைந்து கொடி அணி வகுப்பு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உத்தரவின் பேரில் DCRB டிஎஸ்பி சுபக்குமார் தலைமையில் இந்த பேரணி நடைபெற்றது.
இதில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர்கள் வாணி, பிரபாகரன், காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் கலந்து கொண்டனர்.
இந்த கொடி அணி வகுப்பு திருச்சி ரோடு வ.உ.சி சிலை பகுதியில் இருந்து துவங்கி, பேருந்து நிலையம் மற்றும் புறக்காவல் நிலையம் வரை ஊர்வலமாக நடைபெற்றது.
செய்தி:
ராமர்
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்