Fri. Mar 13th, 2026

செஞ்சி, மார்ச் 12 – விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஒன்றியம், ராஜாம்புலியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பள்ளி சார்பில் உலக மகளிர் தின விழா விழுப்புரம் மாவட்ட பொருளாளர் சங்கர்நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

பட்டதாரி ஆசிரியர் ஷாலினி அனைவரையும் வரவேற்றார். 
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மாநில பொதுக்குழு உறுப்பினர் வாசு கார்த்திகேயன் முன்னிலைவகித்தார். 
சிறப்பு அழைப்பாளராக வல்லம் ஒன்றிய மாவட்ட பொறுப்பாளர் தென்னரசு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு.
பெண் ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சமையல் உதவியாளர்களுக்கு சால்வை, கேடயம், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

கலந்துகொண்டவர்கள்:
– மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வ இளங்கோவன் 
– வல்லம் ஒன்றிய செயலாளர் வசந்த் 
– வல்லம் ஒன்றிய துணைசெயலாளர் நமச்சிவாயம் 
– வானவில் மன்றக் கருத்தாளர்கள் மகாலட்சுமி, கிரிஜா 
– பள்ளி ஆசிரியர்கள் சபிதா, கலைவாணி, சத்யா 
– அருகிலுள்ள பள்ளி ஆசிரியை பூங்குழலி 
– தொழில்நுட்ப ஆய்வக உதவியாளர் தபசு 
– சத்துணவு அமைப்பாளர் கனகசுபா 
– சமையல் உதவியாளர்கள் ராணி, உஷா, கவிதா 
– அங்கன்வாடி பணியாளர் இலக்கியா 
– மாணவ, மாணவிகள்.

*செய்தி: சக்திவேல் விஜயன், விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தியாளர்.* 

By TN NEWS