விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் நிலைய போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநில மதுபானத்தை கடத்தி வந்த ஒருவரை கைது செய்து 130 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தராசு தலைமையில் போலீசார் ரோஷனை முருகன் கோவில் அருகே வாகனத் தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், அந்த வாகனத்தில் புதுச்சேரி மாநிலத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு விற்பனைக்காக மதுபானங்கள் கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், அவர் திண்டிவனம் அய்யந்தோப்பு முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ரமணி என்பவரின் மகன் மணிகண்டன் (33) என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து 180 மில்லி அளவு கொண்ட 130 புதுச்சேரி மதுபான பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மணிகண்டனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
சக்திவேல் விஜயன்
விழுப்புரம் மாவட்ட கிரைம் செய்தியாளர்
உடன்: தமிழ் மதியழகன்
விழுப்புரம் மாவட்ட முதன்மை செய்தியாளர்