நத்தம், மார்ச்:
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் ஊரக உட்கோட்டம் நத்தம் காவல் நிலையச் சரகத்திற்குட்பட்ட நத்தம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவை முன்னிட்டு நாளை (10.03.2026) வழுக்குமரம் ஏறும் நிகழ்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து தீச்சட்டி மற்றும் பூக்குழி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஒரு லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மேற்கொண்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 4 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உட்பட சுமார் 500 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், திருவிழா பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர்
ராமர்