Sat. Mar 7th, 2026

குடியாத்தம், மார்ச் 6:

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பகுதியில் நடைபெறும் வாரச் சந்தையில் சுங்கம் வசூல் செய்யும் உரிமைக்கான 2026–2027 ஆண்டிற்கான பொது ஏலம் இன்று மூன்றாவது முறையாக நடத்தப்பட்டது.

இந்த ஏலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி மற்றும் வின்சென்ட் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் அருண் முரளி, பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் கேசவேலு, வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வாரச் சந்தை சுங்க வசூலுக்கான ஏலத்தில் பங்கேற்க ரூ.5,000 வைப்பு தொகையாக 19 பேர் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். ஆனால் அரசு நிர்ணயித்த தொகையை ஏற்க யாரும் முன்வராததால், இந்த ஏலம் மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், ஏலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்றதால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குடியாத்தம் நகர போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்




By TN NEWS