Pappireddipatti: பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மார்ச் 1-ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் M. K. ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தி.மு.க தருமபுரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், புதுவாழ்வுத் திட்ட பணியாளர்கள், மகளிர் திட்டம் (100 நாள் வேலைத் திட்டம்) பணியாளர்கள், பணித்தளப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 483 களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளருமான முனைவர் பி. பழனியப்பன் கலந்து கொண்டு, திமுக அரசு செயல்படுத்தி வரும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கமாக உரையாற்றினார். தொடர்ந்து களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பி.எஸ். சரவணன், திமுக நிர்வாகிகள் சுர்ஜித், நரேஷ் குமார் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் பலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வே. பசுபதி
தமிழ்நாடு டுடே
மக்கள் செய்தி தொடர்பு அதிகாரி