குடியாத்தத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை – ஜனநாயக உரிமை மீறல் என குற்றச்சாட்டு.
குடியாத்தம் | பிப். 9:
நடப்பு மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்தை புறக்கணித்த ஒன்றிய அரசை கண்டித்தும், பாராளுமன்றத்தில் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பேச விடாமல் தடுத்து ஜனநாயக படுகொலை செய்ததாக குற்றம்சாட்டியும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் குடியாத்தத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
🔹 மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்.
வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், 08.02.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் அருகே இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
தமிழகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடுகளை மறுத்த ஒன்றிய அரசின் போக்கு மாநில உரிமைகளுக்கு எதிரானது என போராட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
🔹 மாவட்ட தலைவர் தலைமையில் போராட்டம்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. சுரேஷ்குமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், சேகரன், பாஸ்கரன், பாரத் நவீன்குமார், யுவராஜ், பூபதிராஜா உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
🔹 வரவேற்புரை – கண்டன உரைகள்.
குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி பொறுப்பு குழு உறுப்பினர் டாக்டர் நவீன்பிரபு வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், மாநில பேச்சாளர் துரை. முருகேசன், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
🔹 ஜனநாயக படுகொலை என கடும் விமர்சனம்.
பாராளுமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவரை பேச விடாமல் தடுத்தது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் எனவும், இதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
🔹 பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் பங்கேற்பு.
இந்த ஆர்ப்பாட்டத்தில்,
வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் வீராங்கன், சங்கர், ஜோதி கணேசன், விஜயகுமார், நித்தியானந்தம், தனசேகரன்,
வட்டார பொறுப்பாளர்கள் ஆரோன், பாபு,
பேரணாம்பட்டு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் முஜம்மில் அஹமத்,
பள்ளிகொண்டா பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் அக்பர் பாஷா,
மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன்,
ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ராகேஷ்,
மாவட்ட RGPRS தலைவர் ஆனந்தவேல்,
மாநில RGPRS துணைத் தலைவர் ராஜசேகரன்,
மாநில சிறுபான்மையினர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் MD. ராகிப்,
மாநில ஓபிசி பிரிவு பொதுச் செயலாளர் ஜலேந்திரன்,
பள்ளிகொண்டா பேரூர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிக்கந்தர் பாஷா,
இலியாஸ் பாஷா,
நிர்வாகிகள் ரங்கநாதன், சத்தியமூர்த்தி, மனோகரன், ஸ்டாலின், ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
🔹 போராட்டம் அமைதியாக நிறைவு.
தமிழக உரிமைகளை காக்கவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும் காங்கிரஸ் தொடர்ந்து களத்தில் நிற்கும் என போராட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன் நன்றியுரை ஆற்றினார்.
✍️ செய்தி :
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா