Fri. Feb 27th, 2026

வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா வட்டாட்சியர் அலுவலகத்தில், ஜனவரி 30 அன்று இன்று காலை தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்ட வழங்கல் அலுவலர் திவ்யா பிரவணம் தலைமை தாங்கினார். துணை வட்டாட்சியர் சிவக்குமார், மேற்கு வருவாய் ஆய்வாளர் செந்தில் ஆகியோர் தலைமையிடத்தில் முன்னிலை வகித்தனர்.

இதில் வருவாய் துறை அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.

நிகழ்ச்சியில்,
“இந்திய அரசியலமைப்பின் மீது இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் / குடிமகளாகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்”
என்ற கோஷங்களை முழங்கியபடி, தீண்டாமை ஒழிக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இந்த உறுதிமொழி நிகழ்ச்சி, சமூக சமத்துவம் மற்றும் மனித உரிமைகளை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
K.V. ராஜேந்திரன்

By TN NEWS