🛕 மாசி பெருவிழா…!
இடம் : புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில், மேல்மலையனூர்
திருவிழா தொடக்கம் : 15 ஆம் தேதி – மஹா சிவராத்திரி
முக்கிய நிகழ்வு : 16 ஆம் தேதி – மயான கொள்ளை
திருவிழாவின் உச்ச நிகழ்ச்சி : ஏழாம் நாள் திருத்தேர் வடம் பிடித்தல்
இன்று : திருத்தேர் செய்யும் பணிக்கான பூஜை சிறப்பாக நடைபெற்றது
அறங்காவலர் குழு, பூசாரிகள், ஊர் பெரியவர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்பு.
🚩 திருத்தேர் விழா – சிறப்பு குறிப்பு:
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெறும் மாசி பெருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வாக திருத்தேர் வடம் பிடித்தல் விளங்குகிறது.
இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, அங்காளம்மன் அருளை பெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
திருத்தேர் செல்லும் ஒவ்வொரு பாதையும், அங்காளம்மனின் சக்தி பரவிய புனிதப் பாதையாக கருதப்படுவதால், பக்தர்கள் பெரும் பக்தி உணர்வுடன் வடம் பிடித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மாசி பெருவிழா, மேல்மலையனூரை ஆன்மீக மையமாக மாற்றும் ஒரு பெருவிழாவாக ஆண்டுதோறும் திகழ்கிறது.
இன்றைய நிகழ்வு:
மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில்
மாசி பெருவிழா தேர் செய்யும் பணி பூஜையுடன் தொடக்கம்.
மேல்மலையனூர் – விழுப்புரம் மாவட்டம்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஏழாம் நாளில் நடைபெறும் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி பக்தர்களின் பெரும் கவனத்தை ஈர்க்கும் விழாவாகும்.
இந்நிலையில், வருகின்ற 15 ஆம் தேதி மஹா சிவராத்திரியுடன் திருவிழா தொடங்கி, 16 ஆம் தேதி மயான கொள்ளை உள்ளிட்ட முக்கிய பெருவிழாக்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, இன்று திருத்தேர் செய்யும் பணிக்கான பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த பூஜை நிகழ்ச்சி அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. இதில் திருக்கோயில் உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர்கள், பூசாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் அறங்காவலர்கள் சுரேஷ், மதியழகன், பச்சையப்பன், சரவணன், வடிவேல், மற்றும் சந்தானம் பூசாரி, திருக்கோயில் மேலாளர் சதீஷ், உள்துறை மணியம் குமார், ஊர் பெரியவர்கள், ஏழு வம்சாவழி பூசாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
செய்தியாளர் :
கே. மாரி
விழுப்புரம் மாவட்டம் (ஒளிப்பதிவாளர்)
