Wed. Jan 14th, 2026

மாணவர்கள் விவசாயத்தை போற்றியும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் – டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்.

குடியாத்தம் :
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காக்கா தோப்பு பகுதியில் அமைந்துள்ள அத்தி கல்விக் குழுமத்தின் சார்பாக, பொங்கல் விழா, ஜனவரி 13 அன்று பாரம்பரிய முறையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் முன்னாள் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாணவர்களுக்கு ஊக்கமளித்த உரை.

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன்,
விவசாயத்தை போற்றும் தமிழர் பண்பாட்டை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்றும்,
கல்வியில் சிறந்து விளங்கி நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.

மேலும்,
பாரம்பரிய முறையில் நடைபெற்ற, கலை நிகழ்ச்சிகள், பரதநாட்டியம்,   சிலம்பாட்டம் ஆகியவற்றை ரசித்து பாராட்டினார்.

நிகழ்ச்சியின் தலைமை .

இந்த விழாவிற்கு, அத்தி மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், சிறுநீரகவியல் நிபுணருமான டாக்டர் சௌந்தரராஜன் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில், 2026 ஆம் ஆண்டு பொங்கல் அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகளை தெரிவித்தார்.அத்தி கல்விக் குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுகநாதன் முன்னிலை வகித்தார்.
முக்கிய பங்கேற்பாளர்கள்.

நிகழ்ச்சியில்,அத்தி மருத்துவமனை கிளை மருத்துவர் டாக்டர் கென்னடி,அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மகேஷ் ராஜாமணி,அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால் ராஜ் சீனித்துரை,குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமரவேல்,குழந்தை நல மூத்த மருத்துவர் டாக்டர் ஹேமாலதா,
ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பெருந்திரளான பங்கேற்பு:

மேலும்,முன்னாள் ரோட்டரி சங்க தலைவர் JKN பழனி மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள்,ஜெயின் சங்கத்தின் உறுப்பினர்கள்,பேராசிரியர்கள், மருத்துவர்கள், அத்தி இயற்கை மருத்துவ மாணவ–மாணவியர்கள்,பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு:

பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற
மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

செய்தி :
கே.வி. ராஜேந்திரன்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர்

By TN NEWS