Sat. Jan 10th, 2026

கேரளா / சபரிமலை :

சபரிமலை மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, ரன்னி தோட்டமண் காவிலிருந்து பாரம்பரியமாக வழங்கப்படும் பஞ்சவர்ண பொடிகள் சபரிமலைக்கு இன்று விழாவாக ஒப்படைக்கப்பட்டன.

மகரவிளக்கு விழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் மணிமண்டப களமெழுத்து பாடலுக்காக பயன்படுத்தப்படும் இந்த பஞ்சவர்ண பொடிகளை, தேவசம் தலைவர் வழக்கறிஞர் ஷைன் ஜி. குருப், பந்தளம் ராஜகோட்டாரத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் நாராயண வர்மா அவர்களிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பந்தளம் அரண்மனை பொருளாளர் தீபா வர்மா, குடும்ப உறுப்பினர் வர்மா கே. ஜிஷ்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சபரிமலைக்கு பஞ்சவர்ண பொடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பூஜைப் பொருட்கள் ரன்னி தோட்டமண் காவிலிருந்து பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய முறையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பஞ்சவர்ண பொடிகளில்

வக்க பொடி

ஊமக்காரி பொடி

அரிசி பொடி

மஞ்சள் பொடி

குங்குமப்பூ

ஆகிய ஐந்து வகை பொடிகள் அடங்கும்.

பந்தளம் அரண்மனையின் மரபின் ஒரு பகுதியாக, பந்தளம் வலிய தம்புராட்டி, ரன்னி குன்னக்கட்டு பஞ்சவர்ண பொடிகளை குருப்பன்களிடம் ஒப்படைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. இவை சபரிமலை மகரவிளக்கு திருவிழாவின்போது, மாளிகபுரத்தில் உள்ள மணிமண்டபத்தில் நடைபெறும் களமெழுத்து பாடலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

மகரவிளக்கு திருவிழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்வான இந்த களமெழுத்து பாட்டு, இறைவனின் ஐந்து விதமான கலசங்களை சித்தரிக்கும் பாரம்பரிய பாடலாக விளங்குகிறது.

இந்த விழாவில்,
கோவில் மேல்சாந்தி அஜித்குமார் பொட்டி,
கீழ்சாந்தி ஜிஷ்ணு,
சபரிமலை களமெழுத்து கார்மி ரதீஷ் குருப்,
தேவஸ்வம் செயலாளர் ஸ்ரீகுமார்,
பொருளாளர் சி.என். பிரசாத்,
கே.ஜி. ராஜீவ், சந்தோஷ் பணிக்கர், பினோஜ் மோன், சுனில் குமார், ரகு, பி.எஸ். ஜெயன், மாலியேக்கல் பினு, புல்லுப்பிரம் ராஜேஷ், சந்திராலயம், குன்னக்காட்டு ரவிக்குமார், குன்னக்காட்டு ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு டுடே – செய்தியாளர்
ஷாலு, கேரளா (சபரிமலை)


By TN NEWS