Sat. Jan 10th, 2026

110 பேருக்கு பணி நியமன கடிதம் – பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பேச்சு.

ஜனவரி 5 | வேலூர் மாவட்டம் – குடியாத்தம்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகிகள் நியமன மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு கட்சியின் மாநில பொருளாளர் கே.பி. சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரித்விராஜன் வரவேற்புரை ஆற்றினார்.

சிறப்பு அழைப்பாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக,
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின்
மாநில பொதுச் செயலாளர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில்,

“தமிழகத்தில் இனிமேல் ஆட்சி அமைப்பது
கருப்பும் இல்லை, காவியும் இல்லை, சிவப்பும் இல்லை –
நீலம்தான் ஆட்சி அமைக்கும்” என்று கூறியபோது, ‘ஜெய் பீம்… ஜெய் பீம்…’ என்ற கரகோஷத்துடன் தொண்டர்கள் உற்சாக முழக்கமிட்டனர்.

10 மாவட்டங்களில் கட்சி பலம்

மேலும் அவர்,
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி வலுவாக உள்ளது என்று தெரிவித்தார்.

நிர்வாகிகள் நியமனம்:

இந்த நிகழ்வின் போது, வேலூர் மாவட்ட அளவில்
110 பொறுப்பாளர்களுக்கு பணி நியமன கடிதங்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

செய்தியாளர்களிடம் பேட்டி.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபொற்கொடி ஆம்ஸ்ட்ராங்,
வேலூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் தொண்டர்கள்
உறுப்பினர்களாக உள்ளதாகவும், தமிழகத்தில் 10மாவட்டங்களில் கட்சி வலுவாக செயல்பட்டு வருகிறது என்றும்,

தேர்தல் கூட்டணி தொடர்பாக,
மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி
பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும்
தெரிவித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS