Sun. Jan 11th, 2026

வேலூர் – டிசம்பர் 28.

வேலூர் தெற்கு மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மத்திய ஒன்றியம் அணைக்கட்டு ஊராட்சி, சின்ன அணைக்கட்டு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இன்று நடைபெற்ற விழாவில் திறந்து வைக்கப்பட்டது.

இவ்விழாவில், வேலூர் தெற்கு மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான திரு. ஏ.பி. நந்தகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி புதிய அங்கன்வாடி மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

விழாவில்,

மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திரு. மு. பாபு,

மத்திய ஒன்றிய செயலாளர் திரு. பி. வெங்கடேசன்,

ஒன்றிய குழுத் தலைவர் திரு. சி. பாஸ்கரன்,

மாவட்ட கவுன்சிலர் திரு. கிருஷ்ணமேனன்,

ஒன்றிய நிர்வாகிகள் திரு. ராமச்சந்திரன், திரு. செந்தில்குமார், திரு. அஸ்ஸாம் பாஷா,

ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. திலகவதி சாரதி,
உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டதன் மூலம், சின்ன அணைக்கட்டு கிராமத்தில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்து, முன்பள்ளி கல்வி மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் மேலும் மேம்படும் என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட செய்தியாளர்
T. தென்பாண்டியன்

By TN NEWS