Sun. Jan 11th, 2026

குடியாத்தம், டிசம்பர் 29

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், சமூக சேவகர் கே.வி. ராஜேந்திரன் ஏற்பாட்டில், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் விதவைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, 94-வது மாதமாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி, 28.12.2025 அன்று குடியாத்தம் நடுப்பேட்டை ராஜாஜி தெருவில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 100 நபர்களுக்கு அரிசி, பருப்பு, சேமியா, ரவை, போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய நல உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு சமூக சேவகர் கே.வி. ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் வி.இ. கருணா முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக குடியாத்தம் வட்டாட்சியர் கே. பழனி கலந்து கொண்டு, பயனாளர்களுக்கு நல உதவிப் பொருட்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

மேலும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா,
36-ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ம. மனோஜ்,
முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜி. நவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சமூக சேவையை பாராட்டினர்.

மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தொடர்ந்து 94 மாதங்களாக இடைவிடாது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சேவை, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கே.வி. ராஜேந்திரன்

By TN NEWS