Sun. Jan 11th, 2026

குடியாத்தம் | டிசம்பர் 25

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கல்லபாடி ஊராட்சியில் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு, பெண்களுக்கான தொழில் முனைவோர் பயிற்சி முகாம் கடந்த டிசம்பர் 22 (திங்கள்) முதல் 24 (புதன்) வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில், கல்லபாடி ஊராட்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 40 பெண்கள் பங்கேற்று, சிறுதானிய உணவுகள் தயாரித்தல், மதிப்பூட்டல் (Value Addition), சந்தைப்படுத்தல் (Marketing) உள்ளிட்ட தொழில் முனைவோர் தொடர்பான முக்கிய அம்சங்களை பயிற்சியாளர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர்.

மூன்று நாள் பயிற்சியின் போது, பெண்கள் குழுக்களாக இணைந்து பல்வேறு சிறுதானிய உணவுப் பொருட்களை தயாரித்து, அவற்றை வணிக ரீதியாக எவ்வாறு சந்தைப்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது என்பதற்கான நடைமுறை பயிற்சியும் வழங்கப்பட்டது.

நிறைவு விழா!

பயிற்சியின் நிறைவு நாளான டிசம்பர் 24 அன்று நடைபெற்ற விழாவில்,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உணவுத் திட்ட மேலாண்மை உதவி இயக்குனர் கலந்து கொண்டு, பயிற்சியில் பங்கேற்ற பெண்களை பாராட்டினார்.

மேலும்,

காஞ்சிபுரம் – Hand in Hand தொண்டு நிறுவனம் மேலாளர்,

ஸ்ரீபெரும்புதூர் – தமிழ்நாடு SIDCO தொழிற்பேட்டை,

ஆட்சியர் திருமதி லதா IAS அவர்கள் கையொப்பமிட்ட சான்றிதழ்கள் மற்றும் தொழில் முனைவோர் கையேடு புத்தகங்கள்,

கல்லபாடி ஊராட்சி மன்ற தலைவர்
திரு. சி. இரமேஷ் குமார், B.Sc., அவர்கள் தலைமையில் பயிற்சியில் பங்கேற்ற பெண்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், கல்லபாடி ஊராட்சி மன்ற உறுப்பினர்
திரு. C. பஞ்சாட்சரம் அவர்களும் உடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

பெண்கள் தன்னிறைவு பெறுவதற்கான இந்த பயிற்சி முகாம், அவர்களின் பொருளாதார வளர்ச்சிக்கும், சுய தொழில் முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்காற்றும் வகையில் அமைந்தது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர்
கேவி. ராஜேந்திரன்

By TN NEWS